Select the correct answer:

1. பழமொழியில் விடுபட்ட சொற்களை நிறைவு செய்க.
தண்ணீர் __________ ஆனாலும் நெருப்பை அணைக்கும்.

2. கார்த்திகை மாசம்________ கண்ட மாதிரி.
மேற்கண்ட பழமொழியை நிறைவு செய்க.

3. கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவை தாம்
முடிந்தாலும் பீழை தரும்.
அணை மோனையைக் கண்டறிக.

4. எதுகையினைக் கண்டறிக:
'சிருங்கி பேரம் எனத்திரைக் கங்கையின்
மருங்கு தோன்றும் நகருறை வாழ்க்கையன்'

5. எவ்வகை வாக்கியம் என அறிக.
தென்னை மரத்துக்குக் கிளைகள் இல்லை.

6. எளிதில் பொருள் விளங்கும்படி அமைந்த சொற்கள் இயற்சொற்கள் எனப்படும்.
விடைக்கேற்ற வினா அமைக்க?

7. தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்.
விடைக்கேற்ற வினா அமைக்க?

8. 'கலங்காது' என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு__________

9. பொருத்துக:
(a) பொருட்பெயர் 1. மாலை, இரவு
(b) இடப்பெயர் 2. முகம், கை
(c) காலப்பெயர் 3. நாற்காலி, புத்தகம்
(d) சினைப்பெயர் 4. வேலூர், நாமக்கல்
(a) (b) (c) (d)

10. 'தகர' வரிசைச் சொற்களை அகர வரிசையில் எழுது.
திண்ணை, தங்கம், துணை, தாழ்ப்பாள், தீ, தீது